போராட்டம்,
உணவிற்காக...
அன்பிற்காக...
உறவை தக்கவைப்பதற்காக...
பணத்திற்காக...
அமைதிக்காக...
இனத்தை காப்பதற்காக...
இடத்திற்காக...
நிலத்திற்காக...
மொழிக்காக...
கலச்சாரத்திற்காக...
பெயருக்காக...
அந்தஸ்துக்காக...
போராட்டத்தை ஒழிப்பதற்காக...
போராட்டம்.
போராட தெரியாதவன் ஏழை, போராட தெரிந்தவன் பணக்காரன், போராட சொல்லிக்
கொடுப்பவன் பேரறிஞன், போராடுபவன் போராளி.
எனில் மனிதன் எங்கே...?
போராடப்பிறந்தவன் தான் மனிதனா?
அப்படியானால், உண்மையில் இந்த வாழ்க்கையின் பயன் மற்றும் பிறந்ததற்கான
நோக்கம் என்ன?
வாழ்க்கையின் பயனையும், நாம் பிறந்த நோக்கத்தையும் அறியாமலேயே
வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்,
மனிதன் என்ற போர்வையில் மிருகமாக...